திருச்சிற்றம்பல தெய்வமணிமாலை

திரு. இரா. குப்புசாமி, சேலம். கைப்பேசி: 98427 51510 உள்ளங்களே! சென்ற மாதம் பஞ்ச அமுதங்களைப் பற்றியும், அவை நம் உடலில் எங்கெங்கு எவ்வாறு உருவாகின்றன என்பதைப் பற்றியும் கண்டோம்நம் பெருமானார் தெய்வ மணிமாலை என ஏன் அருளியுள்ளார் என்பதையும், அதுவும் திருச்சிற்றம்பல தெய்வமணி மாலை என ஏன் இப்பகுதிக்கு பெயரிட்டுள்ளார் என்பதையும் கண்டோம். அதுமட்டுமல்லாது திருச்சிற்றம்பலம் என்பது என்ன? தென்னாடுடைய சிவனே போற்றி என்று மாணிக்க வாசக சுவாமிகள் ஏன் அருளியுள்ளார்கள்? தென்னாடு எது? காசி என்ன? போன்ற பல வினாக்களுக்கு நமக்கு விடை கிடைத்தது. இந்த உண்மைகள் எல்லாவற்றையும் இதற்கு முன் தோன்றிய சித்தர்கள் மறைத்து வைக்க நம் பெருமானார் மட்டும் ஏன் இவ்வளவு வெட்ட வெளிச்சமாக பகர்ந்தார்களென்றால் அதற்கு தயவு ஒன்றே காரணம் என்பதையும் கண்டோம். இனி கடவுள் வழிபாட்டில் குழப்பமில்லாமல் எப்படிச் செல்வது? என்ற ஒரு கேள்வி நம் எல்லோருள்ளும் எழுந்திருக்கும். அதற்கான விடையை இங்கே காண்போம். வள்ளல் பெருமானாரின் கடவுள் கொள்கை என்பது என்ன? அதைப் புரிந்து கொண்டால்தான் மேற்கண்ட கேள்விக்குச் சரியான விடை கிடைக்கும். 'கடவுள் ஒருவரே. உதாரணத்திற்கு நம் அரசு போல். ஆனால் அந்த அரசு கீழ் மட்டத்திலிருந்து ஜனாதிபதி வரை பல்வேறு வடிவங்களில் செயல்படுகிறதுஒவ்வொரு வடிவத்திற்கும் ஒரு குறிப்பிட்ட ஆற்றல், அதிகாரம் உண்டுநகரவை உறுப்பினர், மாநகர உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்பாராளுமன்ற உறுப்பினர், முதல் மந்திரி, மத்திய மந்திரி என்று ஒவ்வொருவருக்கும் அவரவருடைய தகுதி மற்றும் பதவிக்கேற்ப அதிகாரங்கள் உண்டு. அதேபோல் கடவுளும் ஒருவரே ஆயினும் பல்வேறு உருவத்தில்உருஅருவத்தில், அருவத்தில் நின்று அவரவர் தகுதி மற்றும் கோரிக்கைக்கு ஏற்ப வரம் தருகிறார். பிரம்மத்துக்கும் மேம்பட்டது சிவம். அதை மனிதத் தலையின் மையத்தில் ஆன்ம சிற்சபையில் கண்டு ஐக்கியமாவது கடினம். சாலோபம், சாமீபம், சாரூபம், சாயுச்யம் என்ற நான்கு பயன்களைத் தருவார் சிவம். சிவத்துக்கு நவநிலைகள் என்று ஆகம நூல்களும், சைவ சித்தாந்தமும் கூறும். உரு நான்கு (பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுவரன்), உரு அரு ஒன்று (சிவலிங்கம் அல்லது சதாசிவம்) மற்றும் அரு நான்கு (விந்து, நாதம், பராசக்தி, பரசவம்). சைவ சமய சாத்திரங்களின்படி பரசிவமே கடைசி நிலை. ஆனால் இறைவன் முதல் முறையாக வள்ளலாருக்குத் தன் இயற்கை உண்மை