17 மாநிலங்களில் 'கொரோனா' மருத்துவமனைகள்

புதுடில்லி: 'கொரானோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக 17 மாநிலங்களில் தனி மருத்துவமனைகள் கட்டும் பணி துவங்கியுள்ளது' என மத்திய சுகதாரத்துறை அமைச்கம் தெரிவித்துள்ளது.


டில்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணை செயலர் லாவ் அகர்வால் கூறியதாவது: இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறியுள்ளதற்கான சிறிய அறிகுறி கூட இல்லை. கொசுக்களால் கொரோனா பரவுகிறது என்பது தவறு. நாம் சமூக விலக்கலை 100 சதவீதம் முழுமையாக கடைப்பிடித்தால் கொரோனா பரவலை ஒழித்து விடலாம். ஊரடங்கில் வீட்டுக்குள்ளேயே மக்கள் இருந்தாலே போதும் கொரோனா கட்டுப்படும். இவ்வாறு அவர் கூறினார்.