காபூல்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனது நாட்டிற்கு மருந்து , மாத்திரை அனுப்பி வைத்தமைக்காக பிரதமர் மோடிக்கு ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி நன்றி தெரிவித்தார்.
கொரோனா பாதித்த நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் பாராசிடமால் மருந்துகளை இந்தியாவிலிருந்து அமெரிக்கா, இஸ்ரேல், பிரேசில் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு 3 லட்சம் ஹைட்ராக்ஸிகுளோராகுயின் மற்றும் 70 ஆயிரம் பாராசிட்டமால் மருந்துகள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. இதனை காபூலில் உள்ள தூதரக அலுவலகத்தில் ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் வினாய்குமார், அந்நாட்டு பொது சுகாதாரத்துறை அமைச்சர் பெரோசுதீனிடம் தலைநகர் வழங்கினார்.
இதற்கு நன்றி தெரிவித்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தனது டுவிட்டரில் கூறியது, இக்கட்டான நிலையில் ஆப்கானுக்கு மருந்துகள் மற்றும் கோதுமை அனுப்பி வைத்த இந்தியாவிற்கும், இந்திய பிரதமரான எனது நண்பர் மோடிக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வரலாறு, கலாச்சார அடிப்படையில் இந்தியாவின் நெருங்கிய நட்புறவு நாடு ஆப்கான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.